கலாநிதி கரீம்தீன் பேராசிரியராக பதவியுயர்வு

கலாநிதி கரீம்தீன் பேராசிரியராக பதவியுயர்வு

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கல்வியியல் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி ஜே.டி. கரீம்தீன், பேராசிரியராக பதவியுர்த்தப்பட்டுள்ளார்.

இதற்கான அனுமதி திறந்த பல்கலைக்கழகத்தின் செனட் சபையினால் அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இலங்கையின் கல்வித் துறையில் பணியாற்றுகின்ற இளம் பேராசிரியர்களில் ஒருவராக இவர் திகழ்கின்றார்.

பதுளை மாவட்டத்தின் சில்மியாபுரத்தினைச் சேர்ந்த இவர், பேருவளை ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் பழைய மாணவராவார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்விமாணி மற்றும் முதுமாணி பட்டத்தை பெற்றுக்கொண்ட இவர், மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் கல்வியில் சமூகவியலில் கலாநிதி பட்டத்தை தனதாக்கி கொண்டுள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகம், தென் கிழக்கு பல்கலைக்கழகம், தேசிய கல்வி நிறுவகம் மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றின் வருகைதரு விரிவுரையாளராகவும் இவர் பணியாற்றி வருகின்றார்.

இதற்கு மேலதிகமாக மலேசிய தேசிய பல்கலைக்கழகம் மற்றும் மலேசியாவில் உள்ள பெகன்டிகன் சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் மாணவர்களுக்கான கருத்தரங்குகளையும் செயற்திட்டங்களையும் இவர் நடாத்தி வருவதுடன் பல்வேறு மாநாடுகளில் பேருரைகளையும் ஆற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.