இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவராக ரூவென் ஹவீயர் அசார் நியமனம்
இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவராக ரூவென் ஹவீயர் அசார் அந்நாட்டு அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் தலைநகரான புதுடில்லியிலிருந்து கொண்டு இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவராக செயற்படும் வகையிலேயே இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய இஸ்ரேலியத் தூதுவர், தனது நற்சான்று பத்திரத்தினை இன்று (15) வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இந்த நிகழ்;வில் ஆஜன்டீனா, சிம்பாப்வே, பிலிபைன்ஸ், டஜிகிஸ்தான் கம்போடியா மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்களும் நற்சான்று பத்திரங்களை கையளித்தமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)